7 காதலர்கள்... வியக்க வைக்கும் வருவாய்: ஆடம்பர வாழ்க்கை தொடர்பில் அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

18 வயதேயான பிரித்தானிய இளம்பெண் வாலண்டினா தமது வாழ்க்கை தொடர்பில் அம்பலப்படுத்திய தகவல்கள் பலபேரை வியப்பில் ஆழ்த்தியது.

மில்லியன் பவுண்டுகள் வங்கி சேமிப்பு, விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் நகைகள் என தமது ஆடம்பர வாழ்க்கைக்கு பின்னால் sugar daddies எனப்படும் பணக்கார காதலர்கள் இருப்பதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வயதான பணக்காரர்கள் தங்களுடன் நேரத்தை செலவிடவும், தேவைப்பட்டால் படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் இளம் பெண்களை தெரிவு செய்து, அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும் பண உதவிகளையும் செய்பவர்களே sugar daddies என அறியப்படுகிறார்கள்.

இதற்கு ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை Sugar babies என அழைக்கின்றனர். இந்த வயதான பணக்கார ஆண்கள் ஆசைப்படும் ஆடை அலங்காரங்களுடன் நேரத்தை செலவிடுவது, மது விருந்துகளில் கலந்துகொள்வது, பாலியல் ரீதியாக அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை இந்த இளம்பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் மனம் திறந்த வாலண்டினா, 40 வயதை கடந்தவர்களும், தொழிலதிபர்களும் தமது சுகர் டாடிகளாக உள்ளனர் என வாலண்டினா தெரிவித்துள்ளார்.

தமது சுகர் டாடி ஒருவரிடம் இருந்து வாரம் ஒன்றிற்கு 3000 பவுண்டுகள் ஈடாக்குவதாக கூறும் வாலண்டினா, மாதம் சுமார் 21,000 பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அந்த ஏழு சுகர் டாடிகளில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களைவிடவும் 40 வயதைக் கடந்தவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறும் வாலண்டினா,

47 வயதான சுகர் டாடி ஒருவரை தாம் மனதார விரும்புவதாகவும், இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றை நிறுவ திட்டமிட்டு வருவதாகவும், சொந்தமாக ஒரு பிராண்ட் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் வாலண்டினா வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...