அரண்மனை வாகனத்தால் படுகாயமடைந்த பெண்: வில்லியம் - கேட் செய்யவிருக்கும் காரியம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
471Shares

அரண்மனை பாதுகாப்பு வாகனம் மோதியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 83 வயது பெண்ணை பார்க்க, இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட் பயணித்த காருக்கு பாதுகாப்பாக சென்றுகொண்டிருந்த அரண்மனை பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் தவறான பாதையில் சென்றதால் விபத்து ஏற்பட்டது.

இதில் ஐரீன் மேயர் என்கிற 83 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்திருப்பது கண்டறியப்பட்டது.

அவர் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி வேதனை தெரிவித்ததாக அரண்மனை தகவல் வெளியிட்டது.

இந்த நிலையில் வில்லியம் அவருக்கு பூங்கொத்து அனுப்பியிருப்பதாகவும், மனைவி கேட் உடன் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் விரைவில் வில்லியம் மற்றும் கேட், படுகாயமடைந்த ஐரீனை நேரில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்