பிரித்தானிய இளவரசரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து: 83 வயது பெண் படுகாயம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
368Shares

பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் பயணித்த காருக்கு பாதுகாவலாக சென்ற பாதுகாவலரின் வாகனம் மோதி, 83 வயது பெண்மணி ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Irene Mayor (83) என்ற அந்த பெண்மணி பாதுகாப்பு வாகனத்தின் முன் விழுந்து விட்டாரா அல்லது வாகனம் அவர் மீது மோதிவிட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Ireneஇன் பக்கத்து வீட்டுக்காரரான Simon Banks என்பவர் கூறும்போது, அந்த இடத்தில் ஏராளமான பொலிசார் கூடியிருந்தார்கள்.

ஒரு பெண் கீழே விழுந்து கிடந்தார், மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

சாலையில் ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்தது என்று கூறினார். இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் செய்தி தொடர்பாளர் ஒருவர், இளவரசர் வில்லியமும் கேட்டும் அந்த சோகமான செய்தி அறிந்து மிகவும் வருந்துவதாக தெரிவித்தார்.

அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் தொடர்பிலிருப்பதாகவும், ராஜ தம்பதி சார்பில் அவருக்கு மலர்கள் அனுப்பி வைக்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமதி Irene சற்று உடல் நலம் தேறியதும் அவரைச் சென்று சந்திக்க இளவரசரும் இளவரசியும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

Ireneஇன் மகள் Fiona கூறும்போது, அவரது தாய்க்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவரது நிலைமையை சீராக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் சம்பவத்தில் தொடர்புடைய பாதுகாவலர் மீது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்