ஒரு கொலை, ஒரு தற்கொலை: காதலன், காதலியை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பரிதாபம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

காதலி தனக்கு துரோகம் செய்ததாக காதலன் தவறாக எண்ணியதையடுத்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக, அவர் காதலியை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Staffordshireஇல் தனது எட்டு வயது மகனுடன் வசித்து வந்த Jayde Hall (26)இன் வாழ்க்கையில் நுழைந்தார் Carl Scott (46).

மூவருமாக இனிமையாக நாட்களை செலவிட்டு வந்த நிலையில், ஒரு நாள் முதல் முறையாக தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார் Jayde.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, Jayde தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், அவருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டிய Scott, தான் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக தெரிவித்துள்ளார்.

உடனே Jayde, போனால் போ என்று கூறிவிட்டு, ஒரு வாரத்திற்குள் தனது வீட்டை விட்டு போய் விட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

Jayde சமாதானம் பேச வருவார் என நம்பியிருந்த நேரத்தில், அவர் வராததால் ஏமாற்றம் அடைந்த Scott, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய Jaydeஐ கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்.

இதை Jaydeஇன் தந்தையே கூறியுள்ளார், ஏனென்றால் Jaydeஐ Scott அவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்வாராம்.

அத்துடன் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தது கண்டு, தாங்களே தங்கள் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என மகிழ்ந்திருந்ததாக Jaydeஇன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Jaydeஐ கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Scott, ஏமாற்றம் தாங்க இயலாமல் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவறான புரிதலால் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையே நாசமாகிப் போனதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார் Jaydeஇன் தந்தை Philip Hall.

அன்று தந்தையர் தினம் என்பதால் தன்னைக் காண மகள் வருவாள் என வாசலிலேயே காத்திருந்த தனக்கு, மகளுடைய மரணச் செய்திதான் கிடைத்தது என்று கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் Philip Hall.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்