இளவரசர் ஹரியை இனத்துரோகி என விமர்சித்த நபர் கைது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அமெரிக்கரான மேகனை மணந்ததற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியை இனத்துரோகி என விமர்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் லீட்ஸைச் சேர்ந்த Michal Szewczuk (19) என்ற இளைஞர், இணையத்தில் வெளியிட்டிருந்த இடுகை ஒன்றில், இளவரசர் ஹரியின் தலைக்கு நேராக துப்பாக்கி ஒன்று நீட்டப்பட்டிருப்பது போல ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது.

அதன் பின்னணியில் இரத்தம் தெறித்திருந்ததோடு, ஸ்வஸ்திகா முத்திரையும் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் ’அப்புறம் பார்க்கலாம் இனத்துரோகியே’ என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அந்த படம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போலவும், வன்முறையைத் தூண்டுவது போலவும் உள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி Rebecca Poulet, கைது செய்யப்பட்ட வலது சாரியினரான Michalக்கு நான்கு ஆண்டுகள், மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவரான Michal, அந்த போஸ்டரை உருவாக்குவதற்கு முன், இணையத்தில் ’Meghan Markle’, ’Prince Harry’ மற்றும் ’pointing gun’ ஆகிய வார்த்தைகளை தேடியது தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி, கலப்பினத்தவரான முன்னாள் நடிகை மேகனை திருமணம் செய்து சில மாதங்களே ஆன நிலையில், இந்த படத்தை வெளியிட்டுள்ளார் Michal.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்