பிரெக்சிட் குழப்பங்களையும் மீறி சாதித்து வரும் பிரித்தானியா: அதிர்ச்சியில் ஐரோப்பிய ஒன்றியம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட் குழப்பங்களையும் மீறி பிரித்தானியாவில் முதலீடுகள் குவிவதைக் கண்டு ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

அது மட்டுமின்றி, பிரான்சும் ஜேர்மனியும் இணைந்தால் கூட எட்ட முடியாத அளவுக்கு பிரித்தானியாவில் அந்நிய முதலீடுகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் பிரித்தானியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை வளர்ந்து வரும் நிலையில், அந்நிய முதலீடுகளைப்பொருத்தவரையில், பிரித்தானியா தொடர்ந்து ஐரோப்பாவில் முன்னிலையில் உள்ளது.

2018ஆம் ஆண்டில் 1.48 ட்ரில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பிரித்தானியா முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இது ஐரோப்பவின் அடுத்த நிலை பெரும் பொருளாதார ஜாம்பவான்களான ஜேர்மனியையும் பிரான்சையும் விட அதிகமாகும்.

இதனால் அமெரிக்கா, சீனாவிற்குப்பிறகு பிரித்தானியா முதலீடுகளில் உலகிலேயே மூன்றாம் இடத்தில் உள்ளது.

பெர்லின் 739 பில்லியன் பவுண்டுகளையும் பாரீஸ் 649 பில்லியன் பவுண்டுகளையும் மட்டுமே ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers