அப்பா இறந்தது தெரியாமல் கல்லறை மீதே விளையாடும் குழந்தை: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மரணம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு குழந்தை, அப்பாவின் கல்லறை மீதே படுத்துக் கொண்டு விளையாடும் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை அந்த குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார்.

Dorchesterஐச் சேர்ந்த Darren Langton (33), ஒரு நாள் திடீரென இறந்து போனார். மகனுடன் வெளியே சென்று திரும்பிய அவரது மனைவி Jessica Pillinger, வீட்டில் கணவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருகிறார்.

பொலிசார் வந்து விசாரணை மேற்கொள்ள, கடைசி வரை Darrenஇன் மரணத்திற்கான காரணம் தெரியவரவேயில்லை.

வெறும் ஓராண்டு மட்டுமே அப்பாவோடு Harvey வாழ்ந்திருந்தாலும், இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பாசப்பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

அப்பா இறந்து விட்டார் என்பது கூட புரியாமல் வீட்டில் என்ன நடந்தாலும் அப்பாவின் கல்லறையில் போய் சொல்வது, எப்போதும் அப்பா அப்பா என்று அழைப்பது என வாழும் மகனுக்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் Jessica மகனை அழைத்துக் கொண்டு கணவரின் கல்லறைக்கு செல்கிறார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், Harvey, தான் வாங்கியுள்ள பொம்மைக் கார்களை அப்பாவிடம் காட்டுவதற்காக அவரது கல்லறைக்கு ஓடுவதைக் காணலாம்.

கல்லறைக்கு செல்லும் Harvey, கல்லறை மீது படுத்துக் கொண்டு 'bye bye Daddy' என்று பாடிக் கொண்டே இருக்கும் காட்சி நெஞ்சை நெகிழச் செய்கிறது.

தினமும் இரவு கதை சொல்லி தூங்கவைப்பதற்கு பதில், Harveyக்கு அவன் தனது அப்பாவுடன் இருக்கும் படங்களை காட்டி விளக்கம் சொல்வாராம் Jessica.

தனது தந்தை ஓராண்டு தன்னுடன் வாழ்ந்தாலும் அவரும் தனக்காக நேரம் செலவளித்திருக்கிறார், தன்னை நேசித்திருக்கிறார் என்பதை அவன் வளர்ந்தாலும் மறந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி செய்வதாக கூறுகிறார் Jessica.

ஒரு நாள் அவனுக்கு மரணம் என்றால் என்ன என்று புரியும் வயதில், அவனே அவனது அப்பாவைக் குறித்து கேட்கும்போது, அவர் இறந்தது குறித்து நான் அவனுக்கு சொல்வேன் என்று கூறும் Jessica, இப்போது அவனது உலகை கவலை மிக்கதாக மாற்ற விரும்பவில்லை என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers