இந்தியாவில் கற்ற தொழிலை லண்டனில் வெற்றிகரமாக செய்து வரும் பிரித்தானியர்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் கற்ற தொழிலை லண்டனில் வெற்றிகரமாக செய்து வரும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் சொந்த ஊரைச் சேர்ந்த பலரும் வெளிநாடு, வெளியூர் போன்றவைகளில் தொழிலை கற்று வந்து, சொந்த ஊரில் அதை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றனர். சாதித்தும் இருக்கின்றனர்.

அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்தியாவிற்கு வந்த போது, கொல்கத்தாவில் மசால் பொரி போன்றவைகள் எப்படி செய்வது என்பதை கற்றுள்ளார். அதன் பின் அதே போன்ற மசால் பொரி மற்றும் சில பொரி வகைகளை பிரித்தானியாவில் ஒரு சின்ன கடை போன்று போட்டு விற்று வருகிறார்.

இந்நிலையில் லண்டனில் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி நடைபெற்று வருவதால், ஓவல் மைதானத்தின் வாசலில் அவர் பொரி விற்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், நான் இதை கொல்கத்தவில் கற்றேன், தற்போது இதை மக்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers