நாங்கள் அதிகம் மிஸ் செய்வது இதை தான்.. பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் குடும்பம் உருக்கம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் 19 ஆண்டுகளாக வசிக்கும் தமிழ் குடும்பத்தார் தாங்கள் தாய் மொழி தமிழை அதிகம் மிஸ் செய்கிறோம் என்றும் கிரிக்கெட் தங்களை கலாசார ரீதியாக இணைக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

சுமி டேவிட் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

சுமி கூறுகையில், பிரித்தானியாவுக்கு வந்து 19 வருடங்கள் ஆகிறது, நம் ஊரை அதிகம் மிஸ் செய்வதோடு, நமது உணவையும் அதிகம் மிஸ் செய்கிறேன்.

முக்கியமாக கிரிக்கெட் என்றால் எனக்கு அதிகம் பிடிக்கும், அது எங்களை கலாசார ரீதியாக இணைக்கிறது.

சிறுவயதில் இருந்து நான் கிரிக்கெட் விளையாடுவேன். இளம் வயதில் பள்ளிக்கு விடுமுறை எடுத்து இந்தியா - அவுஸ்திரேலியா போட்டியை பார்த்துள்ளேன்.

எனக்கு இந்திய வீரர் முகமது அசாரூதின் மிகவும் பிடிக்கும். அதோடு டிராவிட், சச்சின், கங்குலி போன்றோரையும் பிடிக்கும் என்று கூறுகிறார்.

சுமியின் மனைவி கூறுகையில், எனக்கு டென்னீஸ் மற்றும் கிரிக்கெட் அதிகம் பிடித்த விளையாட்டாகும்.

இந்திய அணியால் தான் கிரிக்கெட் எனக்கு அதிகம் பிடிக்கும், இந்தியாவை யாரும் அசைக்க முடியாது. தாய் மொழி தமிழில் பேசுவதை தான் நான் அதிகம் மிஸ் செய்கிறேன்.

என் கணவருடன் தமிழில் பேசுவேன், பின்னர் அலுவலகத்தில் தமிழ் தெரிந்த நபர்களுடன் பேசுவேன்.

தமிழில் பேசுவதே தனி இன்பம், என் மகனுக்கு சரியாக தமிழ் தெரியாது, எந்த கேள்வி கேட்டாலும் ஆங்கிலத்தில் தான் பதில் கூறுவான்.

அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியை கற்று கொடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.

பின்னர் இறுதியாக மூவரும் சேர்ந்து இந்தியா தான் உலகக்கோப்பையை ஜெயிக்கும் என சத்தம் போட்டு மகிழ்ச்சியாக கோஷம் போட்டு தங்களின் நம்பிக்கையை தெரிவித்தனர்.

- BBC - Tamil

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers