லண்டனில் இந்திய கோடீஸ்வரரை திருடன் என்று கத்திய ரசிகர்கள்... என்ன காரணம்? வைரலாகும் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

இந்திய அணியின் போட்டியை காணவந்த கோடீஸ்வரர் மல்லையாவை அங்கிருந்த ரசிகர்கள் திருடன் என்று தொடர்ந்து கூச்சலிட்டதால், அவர் கோபத்துடன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதின, இரண்டுமே பலம் வாய்ந்த அணி என்பதால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று கூறப்பட்டது. அதே போன்று இரு அணியும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆனால் கடைசி கட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சொதப்ப, இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியை காண்பதற்கு பிரபல தொழிலதிபரும், சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கட‌ன் ஏய்ப்பு வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பியவருமான விஜய் மல்லையா, ஓவல் மைதானத்துக்கு நேற்று வந்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேசியபோது, தான் விளையாட்டுப் போட்டியைக் காண வந்ததாகத் கூறினார்.

இதையடுத்து போட்டியை பார்த்துவிட்டு திரும்பிய அவரை, இந்திய ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். திருடன் திருடன் எனக் கூச்சலிட்டனர். இதனால் கோபமான அவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, என் தாய் காயமடையவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்