பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற பயணிகள் விமானத்தில் இளம் பெண் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த விமானி

Report Print Santhan in பிரித்தானியா

விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் கழிவறை என நினைத்து அவசரகால கதவைத் திறந்ததால், விமான பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரிலிருந்து பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு பிகே 702 என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் சென்று வருகிறது.

அந்த வகையில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு, 40 பயணிகளுடன் இந்த விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, அவசரகால வழியை திடீரெனத் திறந்தார்.

அதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. இதைக் கண்ட விமானப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற பயணிகள் பீதி அடைந்தனர்.

இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டதால், விமானி விமானத்தை நிறுத்தினார். அதன் பின் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்