ஆசையாக சுமந்த கருவை கலைக்க 10 முறையும் நிராகரித்த இளம் தாயார்: ஆனால் பிறந்த பெண் பிள்ளைக்கு...

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கருவில் இருக்கும் குழந்தைக்கு நோய் தாக்குதல் இருப்பதாக தெரியவந்தும், கருவை கலைக்க 10 முறையும் நிராகரித்ததாக இளம் தாயார் ஒருவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

மான்செஸ்டர் பகுதியில் குடியிருப்பவர் 29 வயதான நடாலி ஹால்சன். தாம் கர்ப்பிணி என தெரியவந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாவும்,

ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு 22 ஆம் வாரத்தில் பேரதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

பரிசோதனையின்போது கருவில் இருக்கும் பிள்ளைக்கு spina bifida என்ற நோய் தாக்குதல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

spina bifida என்பது முதுகெலும்பு மற்றும் முள்ளந்தண்டு வடம் கருப்பையில் முறையாக உருவாகாததே.

இந்த நிலையில் பிறந்தால் பிள்ளையின் வாழ்க்கை மிகவும் கொடூரமாக மாறிவிடும் என மருத்துவர்கள் நடாலியை நினைவூட்டியுள்ளனர்.

இதனால் கருவரை கலைப்பதே இருக்கும் ஒரே வழி எனவும் மருத்துவர்கள் நடாலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆனால் மருத்துவர்களின் பேச்சை கேட்பதாக இல்லை என கூறிய நடாலி, ஆசையாக தாம் சுமக்கும் பிள்ளையை பெற்றெடுப்பது என்பதில் முடிவாக இருந்தார்.

கர்ப்பத்தின் 38-வது வாரம் வரையில் மருத்துவர்கள், பிறக்கும் பிள்ளையின் எதிர்காலம் கருதி கருவை கலைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபடியே இருந்துள்ளனர்.

ஆனாலும், நடாலியா தமது முடிவில் உறுதியுடன் இருந்துள்ளார். மட்டுமின்றி 38 ஆம் வாரத்தில் அறுவை மூலம் நடாலி பெண் பிள்ளைக்கு தாயானார்.

பிறந்த குழந்தைக்கு மூன்றரை கிலோ எடை இருந்துள்ளது. முதல் பார்வையிலேயே அந்த குழந்தை தம்மை ஈர்த்தது என கூறும் நடாலியா,

அந்த பிள்ளையின் பிறப்பு ஒரு அதிசயமாகவே தாம் கருதியதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்கு பின்னர் முக்கிய அறுவை சிகிச்சைக்கு குழந்தையை மருத்துவர்கள் உட்படுத்தினர்.

சுமார் 12 மணி நேரம் நீண்ட அந்த அறுவை சிகிச்சையால் அந்த குழந்தையை பாதித்துள்ள spina bifida நிலைக்கு பெருமளவு தீர்வு கிட்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை நடந்த அந்த 12 மணி நேரமும் தான் அழுகையுடனே இருந்ததாகவும், அந்த வலியை தாங்கும் நிலையில் குழந்தை இல்லையே என கதறியதாகவும் நடாலியா தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த அழுகைக்கு, மருத்துவர்கள் கூறிய தகவல் மருந்தாக அமைந்தது என நடாலியா நினைவு கூர்ந்துள்ளார்.

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என கூறும் மருத்துவர்கள், பிழைக்காது என கருதி, 10 முறை கருவை கலைக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட குழந்தை தற்போது முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாக நடாலியா வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்