9,000 கோடி மோசடி.. இந்தியா-அவுஸ்திரேலியா போட்டியை காண வந்த விஜய் மல்லையா

Report Print Basu in பிரித்தானியா

9000 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா, லண்டனில், இந்தியா- அவுஸ்திரேலியா உலகக்கோப்பை ஆட்டத்தை நேரில் பார்க்க மைதானத்திற்கு வந்துள்ளார்.

உலகக்கோப்பை: இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தல் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடி வருகிறது.

இந்நிலையில், சுமார் ‌ 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்த போட்டியை காண ஓவல் மைதானத்திற்கு வந்துள்ளார்.

இந்தியாவில் பெரிய அளவில் நிதி மோசடிகள் புரிந்துவிட்டு‌ வெளிநாடு ‌த‌ப்பிச் செல்லும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வை‌க்கும் வகையில் பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்தி‌ய அரசு க‌டந்தாண்டு கொண்டு வந்தது.

அந்தச் சட்டத்தின்‌ கீழ் குற்றவாளி என அறிவிக்க‌ப்பட்ட முதல் ‌தொழிலதிபர் என்ற பெயரை விஜய் மல்லையாவின் மீது நடவடிக்கைகள்‌ தீவிரமடைந்துள்ளது. விஜய் மல்லையாவை, இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஓவல் மைதானத்திற்கு வந்த விஜய் மல்லையா, தான் இங்கு இந்தியா-அவுஸ்திரேலிய போட்டி காண வந்ததாக கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்