3 மணிநேரம் குழந்தைகளுக்கு முன் செய்த செயல்.. 16 ஆண்டுகளாக மிகவும் தேடப்படும் குற்றவாளி சிக்கினான்

Report Print Basu in பிரித்தானியா

ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவன் மால்டா நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் 41 வயதான கிறிஸ்டோபர் காஸ்ட் மோரை, ஸ்விக்கி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

2003 ஆம் ஆண்டு பிரித்தானியாவின், சேஷிர் பகுதியில் வைத்து பிரைன் வாட்டர்ஸ் என்ற நபரை, அவரது இரண்டு குழந்தைகளுக்கு முன்னிலையில் மூன்று மணி நேரம் கொடூரமாக துன்புறுத்தி கொன்றுள்ளான் கிறிஸ்டோபர் காஸ்ட் மோர்.

இதைதொடர்ந்து தலைமறைவான கிறிஸ்டோபரை பொலிசார் தேடி வந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிறிஸ்டோபர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் சேர்த்தனர். இந்நிலையில், ஐரோப்பா கைது வாரண்ட்டை பயன்படுத்தி ஐரோப்பா நாடனான மால்டாவில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டோபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரித்தானியா தேசிய குற்றவியல் முகமை கூறியதவாது, ஆபரேஷன் கேப்டுராவின் மூலம் பிரித்தானியாவில் தேடப்படும் குற்றவாளிகள் 96 பேர் ஐரோப்பா நாடுகளில் தலைமறைவாக இருப்பது கண்டறிப்பட்டது. இதில, வெறும் 12 பேர் பற்றிய தகவல்கள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை.

16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்படுவார். இந்த நிகழ்வுக்காக நாங்கள் பல காலம் காத்திருந்தோம். இந்த தேடுதல் வேட்டையில் இருந்த நாங்கள் பின்வாங்க போவதில்லை.

தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றவாளிகள் உண்மையில் இதைக் கவனிக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்தின் சட்ட அமலாக்கம் எப்படி இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தேசிய குற்றவியல் முகமை கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்