டிரம்ப் ஆதரவு பெற்ற பிரித்தானியா பிரதமர் வேட்பாளர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Basu in பிரித்தானியா

பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் போது போரிஸ் ஜான்சன் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் போது, பிரித்தானியா வாரம் 350 மில்லியன் பவுண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்குவதாக போரிஸ் ஜான்சன் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, மார்கஸ் பால் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பிரித்தானியா உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான காரணத்தை பின்னர் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான போர்ஸ் ஜான்சன் மீது சுமத்தப்பட்ட புகார் அனைத்தும் பொய் என ஜான்சன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

நன்கு நிதியளிக்கப்பட்ட பிரதிவாதிகள் தொடர் விசாணைக்கு முன்னரே விடுவிக்கப்படும் இந்த முடிவை அனுமதிக்க முடியாது. ஜான்சனின் 350 மில்லியன் பவுண்டு மதிப்பீடு, பொது நம்பிக்கை மீதான நேரடி தாக்கத்தை கொண்டிருப்பதாக, மார்க்ஸ் பால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

எனினும், நீதிமன்றத்தின் இந்த முடிவை பிரித்தானியா உள்துறை செயலாளர் சாஜித் ஜாவிட் வரவேற்றுள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக போர்ஸ் ஜான்சன் வர வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers