இங்கிலாந்து சிறையில் எச்சில் தட்டுகளை கழுவும் விக்கிலீக்ஸ் நிறுவனர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, எச்சில் தட்டுகளை கழுவும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தற்போது 50 வாரகால சிறைத்தண்டனை பெற்று இங்கிலாந்தில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜூலியன் அசாஞ்சே, சிறையில் எச்சில் தட்டுக்களை கழுவி வருகிறார்.

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு செல்போனில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், ஜூலியன் அசாஞ்சேவிற்கு மற்றொரு சிறைக்கைதி உதவி செய்கிறார். முன்னதாக ஜூலியன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு விரைவில் நாடு கடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்