வாயில் ரத்தம் தள்ளியபடியே தாய்க்கு அருகில் கிடந்த குழந்தை: சோக சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மது போதையில் பிஞ்சுக்குழந்தை இறப்பதற்கு காரணமாக இருந்த தாய்க்கு 2 ஆண்டுகள் 4 மாதம் சிறைத்தண்டனை விதித்து வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேல்ஸ் நாட்டை சேர்ந்த மெரினா டில்பி (26) என்கிற தாய் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம், தன்னுடைய நான்கு மாத கைக்குழந்தை மற்றும் தங்கையுடன் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அதிகமாக மது குடித்தவர், குழந்தையின் அருகில் படுத்துறங்கியுள்ளார். அன்று இரவு படுக்கையறைக்கு வந்த அவருடைய சகோதரி, குழந்தையின் மேல் மெரினா படுத்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே மெரினாவை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் அவர் அதிக மது போதையில் இருந்ததால் நகர முடியாமல் இருந்துள்ளார். மெரினாவின் வயிற்றுப்பகுதியை தள்ளிய சகோதரி ஒரு வழியாக குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.

அப்போது குழந்தையின் வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, மெரினாவிற்கு 2 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்