லண்டன் விமானத்தில் வாந்தி இருந்த இருக்கையில் பயணித்த பணக்காரர்.. வேதனையுடன் அவர் வெளியிட்ட பதிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இருந்து கிளம்பிய விமானத்தில் உள்ள ஒரு இருக்கையில் வாந்தி இருந்ததை பார்க்காத நபர் அதன் மேலேயே உட்கார்ந்து பயணம் செய்த நிலையில் விமான ஊழியர்களின் செயல் அவரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

டேவ் கில்டியா என்ற பணக்கார தொழிலதிபர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சீட்டில் நகருக்கு கிளம்பிய விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தார்.

விமானத்தில் இருக்கையில் அவர் அமர்ந்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து கால்களை நீட்டியபடி படுத்து தூங்க முயன்றார்.

அப்போது தான் தான் உட்கார்ந்திருந்த இருக்கை முழுவதும் வாந்தி இருந்ததும், அது காய்ந்திருந்ததையும் டேவ் பார்த்தார்.

இது குறித்து டேவ் விமான ஊழியர்களிடம் கூறிய போது அவர்கள் மாற்று இருக்கை கொடுக்காததோடு அவரிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை.

இதனால் டேவ் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் அதிகளவு பணம் கொடுத்து விமான டிக்கெட்களை எடுத்து பயணம் செய்தேன், ஆனால் விமான குழுவினர் எனக்கு உதவாதது அதிர்ச்சியளித்தது என தெரிவித்துள்ளார்.

அந்த பயணம் முழுவதும் போர்வையால் வாந்தி இருந்த இருக்கையை மூடியபடியே அதில் உட்கார்ந்து டேவ் பயணம் செய்துள்ளார்.

இதனிடையில் டேவிடம் தற்போது குறித்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதோடு, இது தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்