பிரித்தானியாவில் 550,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்ட ஒற்றை நாணயம்: அதன் சிறப்பு என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயம் ஒன்று 550,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளது.

குறித்த தங்க நாணயத்தில் ரோமா பேரரசர் Allectus என்பவரின் முகம் பதிக்கப்பட்டுள்ளது. இவரது ஆட்சி காலத்திலேயே பிரித்தானியா ரோமானிய பேரரசின் கீழ் இருந்து வெளியேறியது என கூறப்படுகிறது.

Allectus பேரரசரின் முகம் பதித்த இந்த நாணயம டோவர் பகுதியில் வைத்து பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

தற்போது அந்த நாணயத்தை ஏலத்தில் வைத்த அவருக்கு 550,000 பவுண்டுகள் கிடைத்துள்ளது.

இந்த நாணயத்தின் ஒருபக்கத்தில் பேரரசர் Allectus முகமும், மறுபக்கத்தில் கிரேக்க கடவுள் அப்பல்லோவின் காலடியில் இரு கைதிகள் மண்டியிடுவது போன்றும் அமைந்துள்ளது.

குறித்த தங்க நாணயத்தை பரிசோதித்த நிபுணர்கள், இது சுமார் 100,000 பவுண்டுகள் வரை விலை போகலாம் என கணித்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த நாணயத்தை கண்டெடுத்த அந்த 30 வயது பிரித்தானியரும், போலியான நாணயம் என கருதி, அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் நாணயங்கள் தொடர்பில் ஆய்வு செய்பவர்களிடம் காண்பித்த நிலையில், அவர்கள் இந்த நாணயத்தின் வரலாறையும், மதிப்பையும் அவருக்கு விளக்கியுள்ளனர்.

அதன் பின்னரே அவர் அந்த நாணயத்தை ஏலத்தில் விடும் முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் 550,000 பவுண்டுகளுக்கு அந்த நாணயத்தை சொந்தமாக்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்