பிரித்தானியாவில் பேருந்தில் முத்தமிட மறுத்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு நேர்ந்த கதி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பேருந்து ஒன்றில் பயணித்த ஓரினச்சேர்க்கை தம்பதிகளான பெண்கள் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக முத்தமிட மறுத்ததால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

லண்டன் பேருந்து ஒன்றில், உருகுவேயைச் சேர்ந்த Melania Geymonat (28), தனது அமெரிக்க காதலியான Chris உடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று அறிந்து கொண்ட அந்த பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள், அவர்கள் இருவரையும் முத்தமிட்டுக்கொள்ளுமாறு கூறி, தாங்கள் அதைப் பார்த்து ரசிக்க விரும்புவதாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களை மகிழ்விப்பதற்காக முத்தமிட விரும்பாத அந்த ஜோடி, மறுப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த நிமிடம் Chris, 20இலிருந்து 30 வயதுகளிலிருந்த அந்த இளைஞர்களிடம் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார் Melania.

அந்த இளைஞர்கள் சுற்றி வளைத்து Chrisஐ தாறுமாறாக தாக்க, தடுக்கச் சென்ற Melaniaவுக்கும் சரமாரியாக அடி விழுந்திருக்கிறது.

முகமெல்லாம் இரத்தமாக, பேருந்தை விட்டு இறங்கும் நேரத்தில் அங்கிருந்த பொலிசாரிடம் புகாரளித்ததாக தெரிவிக்கிறார் Melania.

ஓரினச்சேர்க்கையாளர்களான தங்களை பொழுதுபோக்கு அம்சம் போல் மக்கள் பார்ப்பது தன்னை கோபமூட்டுவதாக தெரிவிக்கிறார் Melania.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்