லண்டனில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகத்தில் பயங்கர தீ விபத்து!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

லண்டனின் Mayfair பகுதியில் அமைந்துள்ள Gymkhana உணவகத்தின் தரை தளத்தில் பற்றிய தீ, கூரை வரைக்கும் பரவிய நிலையில், தரை தளம் பெருமளவு சேதமடைந்துள்ளது.

சம்பவத்தை பார்வையிட்டவர்கள், கட்டிடத்தின் மேல் 50 அடி உயரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்திருந்ததாக தெரிவித்தார்கள்.

எட்டு தீயணைப்பு இயந்திரங்களுடன், 60 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், உணவகம் அறிவிப்பு வெளியாகும்வரையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers