லண்டன் லொட்டரியில் கோடிக்கணக்கில் விழுந்த பரிசு! அதை கொண்டாடிய வெற்றியாளர்.. பின்னர் அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் லொட்டரியில் இரண்டு நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்தும் அதை பெற முடியாத சூழலில் நீதிமன்றம் மூலம் அதை பெற முடிவு செய்து வழக்கறிஞரை நாடியுள்ளனர்.

Bolton நகரை சேர்ந்தவர் மார்க் குட்ரம் (36). இவர் மீது சில திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் அதற்காக முன்னர் சிறை தண்டனைகளை அனுபவித்துள்ளார்.

இந்நிலையில் மார்க் தனது நண்பர் வாட்சனுடன் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கினார். இந்த டிக்கெட்டுக்கு £4 மில்லியன் பரிசு விழுந்தது.

ஆனாலும் அவருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை, காரணம் அந்த டிக்கெட்டை டெபிட் கார்டு மூலம் தெற்கு லண்டனில் உள்ள கடையில் மார்க் வாங்கினார்.

அந்த டெபிட் கார்டை மார்க் யாரிடம் இருந்தோ திருடினார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து லொட்டரி நிறுவனம் அவருக்கு தரவேண்டிய பரிசு தொகையை நிறுத்தி வைத்துள்ளது.

இதனிடையில் லொட்டரி பரிசு பணம் கிடைத்து தான் கோடீஸ்வரனாக ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் மார்க் தனது கையில் £50 பணக்கட்டுகளை வைத்து கொண்டு மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்ட நிலையில் தற்போது ஏமாற்றத்தில் உள்ளார்.

இந்த விடயம தொடர்பாக மார்க்கின் நண்பர் ஒருவர் கூறுகையில், பலரும் மார்க் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என நினைக்கிறார்கள்.

ஆனால் சாலையில் தான் அவர் வசிக்கிறார், பிச்சைக்காரர்களுடன் சுற்றி வருகிறார் என கூறினார்.

இது தொடர்பாக லொட்டரி நிறுவனம் கூறுகையில், லொட்டரியில் விழும் பரிசுகள் தொடர்பாக ஆராய்வதில் பாதுகாப்பு நடைமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இது தொடர்பில் எங்களுக்கு சந்தேகம் இருந்தால் தீவிர விசாரணை நடத்தப்படும், அது தான் மார்க் விடயத்தில் செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் லொட்டரி நிறுவனம் தங்களுக்கு பரிசு பணத்தை கொடுக்க கடந்த செவ்வாய்க்கிழமை வரை காலக்கெடுவை மார்க் மற்றும் வாட்சன் விதித்திருந்த நிலையில் பணம் கொடுக்கப்படவில்லை.

இதை தொடர்ந்து இருவரும் ஹென்றி ஹெட்ரான் என்ற வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

ஹென்றி கூறுகையில், எங்கள் கட்சிகாரர்கள் சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

அவர்கள் மீது முன்னர் திருட்டு வழக்கு இருந்ததை இந்த விடயத்துடன் சம்மந்தப்படுத்தக்கூடாது.

மார்க் மற்றும் வாட்சனிடம் லொட்டரி நிறுவனம் மூலம் இனவெறி வழிகளில் சோதனை நடத்தப்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்