லண்டனில் இந்திய பிரபலத்துக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள்...வசமாக சிக்குவாரா? முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் ராபர்ட் வதேரா தொடர்புடைய 8 வீடுகளின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ள நிலையில் அந்த சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் நிலுவையில் உள்ளன. மேலும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்து வதேராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வதேரா பெற்றிருக்கும் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே வெளிநாடுகளுக்கு வதேரா செல்ல நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இதற்கும் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் வதேரா வாங்கிக் குவித்த சொத்து விவரங்களை அமலாக்கத்துறை பெற்றிருக்கிறது.

குறிப்பாக, ரூ.45 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.36 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் 6 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது

இதனடிப்படையில் முதல் கட்டமாக லண்டனில் உள்ள வதேராவின் சொத்துகளை முடக்குவதில் அமலாக்கத்துறை மும்முரமாக இறங்கியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers