பிரித்தானியாவில் இந்தியருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்... அவர் செய்த துணிச்சலான செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இந்தியர் வைத்திருக்கும் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை அவர் சாமர்த்தியமாகவும், தைரியமாகவும் பொலிசில் பிடித்து கொடுத்ததற்காக அவருக்கு துணிச்சலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

பர்மிங்காமில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுகான் பால் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்தாண்டு ஏப்ரலில் அவர் கடைக்குள் மூன்று கொள்ளையர்கள் போலியான பாதுகாப்பு ஐடி பேட்ஜை வைத்து நுழைந்தனர்.

பின்னர் சிசிடிவி கமெரா குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம் என கூறினர். இதையடுத்து சவுகானை அவர்கள் அடித்து உதைத்ததோடு, அவரை கட்டி போட்டு விட்டு அவர் வாயில் பிளாஸ்திரியை ஒட்டினார்கள்.

இந்த சூழ்நிலையிலும் அவசர உதவி அலாரத்தை தோள்பட்டை மூலம் அழுத்திய சவுகான், பாதுகாப்புக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த புகைபோக்கியை திறந்தார்.

இதையடுத்து புகையில் சிக்கி கொண்டு மூவரும் மூச்சுவிட திணறிய நிலையில் அழுதார்கள்.

இதை பார்த்து அந்த வழியாக சென்ற நபர் கடையில் தீப்பிடித்ததாக எண்ணி பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த பின்னர் அவர்களுக்கு அனைத்து விடயங்களும் புரிந்தது. பின்னர் சவுகான் உதவியுடன் மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.

மூவருக்கும் கடந்தாண்டு ஜூலை மாதம் முறையே 14,12, மற்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் தைரியமாக கொள்ளையர்களை சிக்க வைத்த சவுகானுக்கு பொலிசார் இரு தினங்களுக்கு முன்னர் துணிச்சலுக்கான விருதை கொடுத்து கெளரவித்தார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers