அவரை நல்லவர் என நினைத்தேன்! கழிப்பறையில் ரகசிய கமெராவை வைத்த வீட்டு உரிமையாளர் குறித்து குமுறிய மாணவி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது வீட்டில் குடியிருந்த மாணவியின் கழிப்பறையில் ரகசிய கமெராவை பொருத்தியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவுல் போட்டர் (52) என்ற நபருக்கு பல வீடுகள் சொந்தமாக உள்ள நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதியை மாணவி ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாணவி தனது வீட்டின் கழிவறைக்கு சென்ற போது அங்கு ரகசிய கமெரா இருப்பதை கண்டுபிடித்தார்.

அதில் இருந்த மெமரி கார்டை லேப்டாப்பில் போட்டு பார்த்த போது தான் குளிப்பதும், கழிப்பறையை பயன்படுத்தியதும் வீடியோவாக பதிவானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இந்த கமெராவை பொருத்தியது வீட்டு உரிமையாளர் பவுல் தான் என்பதை உறுதி செய்த மாணவி இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் நடந்த பயங்கரமான சம்பவம் இதுதான், நான் பவுலை நல்லவர் என நம்பினேன். என் வீட்டு அறையின் ஒரு சாவி கூட அவரிடம் இருந்தது என கூறினார்.

இதையடுத்து பொலிசார் பவுலை கைது செய்தனர். விசாரணையில் கமெராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை அவர் பார்த்து ரசித்தது தெரியவந்தது.

அவர் மீதான குற்றம் கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பவுல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார், அவர் மீதான அடுத்த விசாரணை நாளை நடக்கவுள்ள நிலையில் தண்டனை விபரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers