பெல்ஃபாஸ்ட் கோல்ஃப் மைதானம் அருகே பொலிஸ் காரில் இருந்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடஅயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் பகுதியில் செயல்ப்பட்டு வரும் கோல்ஃப் மைதானம் அருகே, பொலிஸ் காரிலிருந்து வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோல்ஃப் விளையாடிவிட்டு அப்பகுதி வழியாக சென்ற ஒருவர், மர்ம பொருளை கண்டதும் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் விரைந்து வந்த பொலிஸார், வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்தனர். உடனடி நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்த 70 பொதுமக்களை வேகமாக வெளியற்றினர்.
மேலும், கோல்ஃப் மைதான விடுதிகளில் தங்கியிருந்த 50 பேரை வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.
தற்போது அந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் இராணுவ வெடிகுண்டு அகற்றும் வல்லுனர்கள் வருகை தந்துள்ளனர்.
அந்த வெடிகுண்டினை அகற்ற ஒரு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை தற்போது பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.