பிரித்தானியாவில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற சட்டவிரோத குடியேறி: அம்பலமான பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருட்டு உறவு இருப்பதாக சந்தேகம் கொண்ட சட்டவிரோத குடியேறி ஒருவர் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டவரான 59 வயது முஹம்மது ஜாவேத் என்பவரே சந்தேகத்தின் பேரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தவர்.

நிரந்தர வேலை ஏதும் இல்லாத ஜாவேத், மனைவியை கொன்ற பின்னர் ஈஸ்ட் லண்டனில் உள்ள ஈல்ஃபோர்ட் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

20 ஆண்டுகள் தாம் பாகிஸ்தான் விமானப்படையில் பணியாற்றியதாக கூறும் ஜாவேத், பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறிய பின்னர் நிரந்தர வேலை ஏதும் இன்றி அவதிப்பட்டுள்ளார்.

இதனால் மனைவி சயீதா ஹுசைன் உடன் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை ஜாவேத் தமது மனைவியை கொடூரமாக தாக்கியும் வந்துள்ளார்.

இந்த விவகாரம் பொலிசாரிடம் தெரிவித்தால், சட்டவிரோதமாக குடியேறியுள்ளதால், மீண்டும் தங்களை பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படும் என்பதால் சயீதா மெளனமாகவே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே, தமது மனைவிக்கு முறைகேடான உறவு இருப்பதாகவும், தம்மை ஏமாற்றுவதாகவும் ஜாவேதுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து குடியிருப்பில் தாம் இல்லாத வேளையில் யார் யார் வந்து செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க கமெரா ஒன்றை நிறுவியுள்ளார்.

அதில் இருந்து எந்த தடயமும் சிக்காத நிலையில், ஆத்திரம் கொண்ட ஜாவேத் மனைவி சயீதாவை சுத்தியலால் தாக்கியுள்ளார்.

மேலும், வாள் ஒன்றால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் உடல் முழுவதும் 46 இடத்தில் காயமேற்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் எனவும், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers