உயிருக்கு போராடிய நபருக்கு நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
625Shares

பிரித்தானியாவில் நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்து தன் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு, விபத்தில் சிக்கியவர் தற்போது நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜான் ஓ பிரையன் (47) என்பவர் கடந்த ஆண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, Delamere பகுதியில் விபத்தில் சிக்கினார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், உடனடியாக ஆம்புலன்ஸ், மருத்துவக்குழு மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்த ஜானுக்கு முதலுதவி கொடுத்து, ஹெலிகாப்டரில் ஏற்றி செல்ல முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடி அறுவது சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதால், மார்க் பாரஸ்ட் தலைமையிலான மருத்துவக்குழு நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர்.

அவருடைய இதயப்பகுதியை முழுமையாக திறந்து, ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி இதயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தனர்.

பின்னர் வேகமாக ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜான், இந்த மாத ஆரம்பத்தில் தன்னுடைய மகள் எமியுடன் நடந்து செல்லும் அளவிற்கு உடல்நிலையில் முன்னேறியுள்ளார்.

விபத்து நடந்த சமயத்தில் தன்னுடைய உயிரை காப்பாற்றிய பலரையும் தற்போது நேரில் சந்தித்து நன்றி கூறி வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers