தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டு பிரித்தானிய தெருவில் ஆட்டம் போட்ட பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், அதனை கொண்டாடும் விதமாக தெருவில் திடீரென நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த சோஃபி டானர் என்கிற 40 வயது பெண் ஒருவர், 'Reader, I Married Me' என்கிற புத்தகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், அதில் இடம்பெற்ற கதாபாத்திரம் போல தன்னைத்தானே 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தை புதுப்பித்துக்கொள்ளும் விதமாக, இங்கிலாந்து தெருவில் ஊர்வலமாக வந்து திடீரென நடனமாடி அசைத்தியுள்ளார்.

அவருடைய நண்பர்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். அவருடைய தோழன் ஒருவர் பாதிரியார் உடையில் வந்து கலந்துகொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சனிக்கிழமையன்று, என் சுய திருமண விழாவை நினைவுகூர்ந்து என் புதிய நாவலை அறிமுகப்படுத்தி, என் சுயமதிப்பை புதுப்பித்துக்கொண்டேன்.

என்னுடைய சபதம் புதுப்பிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு நாளும் முடிவுக்கு வருவதில்லை.

என்னை நானே விவாகரத்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. என்றைக்காவது வேறு ஒரு நபர் மேல் காதல் வந்தால் அவரை திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers