பிரித்தானியா மகாராணியின் அட்மினாக ஆட்கள் தேவை என அறிவிப்பு... சம்பளம் மட்டும் எவ்வளவும் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சமூகவலைத்தள பக்கங்களை நிர்வகிக்க அட்மின் தேவை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகாராணி எலிசெபத், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கையாள தெரிந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேர்வோருக்கு, இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 26.5 லட்சம் ரூபாய் சம்பளமும், ஆண்டுக்கு 33 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதிய உணவு அரண்மனையிலேயே வழங்கப்படும். காலை முதல் மாலை வரை அரண்மனையிலேயே இருந்து மகாராணி பதிவிட சொல்வதை பதிவிடுவது மட்டுமே வேலை. . தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், வரும் 26-ஆம் திகதிக்குள் ராயல் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers