பிரித்தானியாவில 10,000 குடும்பங்கள் உணவின்றி தவிப்பு.. உண்மையை வெளியிட்ட மனித உரிமை ஆணையம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் 10,000 ஏழை குடும்பங்கள் உண்ண உணவின்றி தவித்து வருவதாக பிரித்தானியாவை கண்காணித்து வரும் மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான கடமையிலிருந்து பிரித்தானியா அரசாங்கம் தவறியுள்ளதாக மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளது.

உலகின் ஐந்தவாது பெரிய பொருளாதார நாடாக திகழும் பிரித்தானியாவில் உள்ள 126 நிபுணர்கள், சமூக ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடும்பங்களை நேர்காணல் செய்த மனித உரிமை ஆணையம் 115 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பிரித்தானியாவின் பெரிய உணவு வங்கி தொண்டு நிறுவனமான டிரிஸல் டிரஸ்ட், 2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் நாட்டில் அவசர உணவு விநியோகங்கள் வழங்கப்பட்டது 5,146 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆவணம் செய்துள்ளது.

2010 முதல் சிக்கன நடவடிக்கையாக பொதுநல நிதியை பிரித்தானியா அரசாங்கம் நிறுத்தியதே, நாட்டில் உணவு பஞ்சம் அதிகரிப்புக்கு காரணம் என மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

பிரித்தானியா அரசாங்கத்தின் கொள்கைகள் கொடூரமான, தீங்கு விளைவிக்கும் கொள்கை என மனித உரிமை ஆணைய ஆய்வாளர் கார்திக் ராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரித்தானியா அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வறுமையிலிருந்து வெளிவர ஒவ்வொரு குடும்பங்களில் உள்ள பெற்றோர்களையும் வேலையில அமர்த்த சிறப்பான வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொழிலாளர் நலன்களுக்காக ஆண்டிற்கு 95 பில்லியன் பவுண்டுகளை செலவிடுகிறோம், மேலும், மிக குறைபாடுடைய ஒரு மில்லியனுக்கும் மேலான குழந்தைகளுக்கு பாடசாலையில் இலவச உணவு வழங்குகிறோம். இதற்கிடையில், பொதுநல நிதி நிறுத்தம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers