இறப்பதற்கு முன் அம்மாவின் முகத்தை பார்த்து கெஞ்சிய சிறுமி: அடுத்த நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுமி 6 நிமிடங்கள் மட்டுமே இறந்து பின்னர் உயிர்பெற்று எழுந்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கார்லெட் என்கிற 10 வயது சிறுமிக்கு கடந்த 9ம் திகதியன்று திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது.

பள்ளி கிளம்பும் நேரத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை அம்மா, தொண்டையில் புண்ணாக இருக்கிறது என கூறியுள்ளார்.

ஆனால் சிறுமியின் அம்மா கிளெய்ர் லாங்டன் (39), அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று மாலை மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக கிளெய்ர் லாங்டன் சென்றிருக்கிறார்.

அப்போது தான் தன்னுடைய ஆஸ்துமா இன்ஹேலரை மகள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தன்னுடைய மற்ற இரண்டு மகள்கள் எபோனி (9) மற்றும் அம்பர் (3) ஆகியோரை அழைத்து வருவதற்காக கிளெய்ர் லாங்டன் கிளம்பியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் ஸ்கார்லெட் நிலை மோசமடைந்துள்ளது.

திடீரென இன்ஹேலர் வேலை செய்யாமல் போனதால், ஸ்கார்லெட் உடல் முழுவதும் நீல நிறமாக மாற ஆரம்பித்துள்ளது. தாயின் கைகளில் அப்படியே மயங்கி விழுந்த ஸ்கார்லெட், "என்னை இறக்க விடாதீர்கள் அம்மா" என கெஞ்சியுள்ளார்.

சிறிது நேரத்தில் சிறுமி இறந்துவிட்டார். அங்கிருந்த அனைவரும் கதறி அழ ஆரம்பித்துள்ளனர். சிறுமியின் நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பும் நின்றதை பார்த்து அவருடைய அம்மா இன்னும் அழ ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் சிறுமியின் நாடித்துடிப்பை பார்த்துவிட்டு முதலுதவி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

6 நிமிடங்கள் கழித்து சிறுமிக்கு மீண்டும் உயிர்வந்துள்ளது. பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிறுமிக்கு ஆஸ்துமா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி 11ம் திகதியன்று வீடு திரும்பியதாகவும், தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவருடைய தாய் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நோயாளியை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை என சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவ ஊழியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...