அரச குடும்பத்தில் மற்றொரு திருமணம்! மனைவி இல்லாமல் நடிகையுடன் கலந்துகொண்ட ஹரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அரச குடும்ப உறுப்பினரான லேடி கேப்ரியல்லா வின்ட்சர் திருமண நிகழ்வில் இளவரசர் ஹரி, நடிகை சோஃபி விங்கிள்மேன் உடன் கலந்து கொண்டார்.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு ஆர்ச்சி என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்து 12 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், முதன்முறையாக அரச குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

கென்ட் இளவரசர் மைக்கேலினுடைய மகள் லேடி கேப்ரியல்லா வின்ட்சருக்கும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை சேர்ந்த தாமஸ் கிங்ஸ்டனுக்கும் செயின்ட் ஜார்ஜ்ஸ் சேப்பலில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஹரி & மேகன் மற்றும் யூஜின் ஆகியோரின் திருமணம் முடிந்த ஒரு வருடம் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், 15 ஆம் நூற்றாண்டில் நடந்த மூன்றாவது அரச திருமணம் இதுவாகும்.

இதில் இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேத்தரின் கலந்துகொள்ளவில்லை. அதேபோல சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த மேகனும் கலந்துகொள்ளவில்லை.

மனைவி இல்லாமால் அரச நிகழ்விற்கு வந்த இளவரசர் ஹரி, ஆச்சர்யமளிக்கும் வகையில், நடிகை சோஃபி விங்கிள்மேன் உடன் சேப்பலிற்கு வந்து சேர்ந்தார்.

முன்னதாக நடிகை சோஃபி விங்கிள்மேன், மணமகள் லேடி கேப்ரியல்லாவின் சகோதரர் லார்ட் பிரடெரிக்கை திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்விற்கு பின்னர் பொதுமக்கள் மத்தியில் அரிதாகவே தோன்றும் இளவரசர் பிலிப், ராணியுடன் கலந்துகொண்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...