மகாராணியாரின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்: எதை திருடினான் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

விக்டோரியா மகாராணிக்கு 19 வயது இருக்கும்போது, 1838ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஒரு இளைஞனை பக்கிங்காம் மாளிகையில் கண்ட ஒரு காவலர் அவனை துரத்த, அவன் சிக்காமல் தப்பி விட்டான்.

பின்னர் மேற்கொண்ட சோதனையில், அந்த மர்ம நபர் மகாராணியாரின் அறைக்குள் நுழைந்தது தெரியவந்தது. தொடர்ந்து தேடும்போது அந்த நபர் சிக்கினார்.

அவரை சோதனையிட்டபோது மகாராணியாரின் உள்ளாடைகள் பலவற்றை திருடி அவர் தனது கால்சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த நபர், தான் 11 மாதங்களாக மாளிகையில் ஒளிந்திருந்ததாகவும், அமைச்சர்களில் கூட்டங்களை ஒட்டுக் கேட்டதாகவும் இரவு நேரங்களில் மாளிகையில் சுற்றியதாகவும் தெரிவித்தார்.

பத்திரிகையில் அவரைக் குறித்த செய்திகள் வெளியானபின்னரே, அந்த இளைஞனின் பெயர் எட்வர்ட் ஜோன்ஸ் (14) என்பதும், அவர் ஒரு ஏழை தையல்காரரின் மகன் என்பதும் மகாராணி மீது அதிகப்படியான ஈர்ப்பு கொண்டவர் என்பதும் தெரியவந்தது.

மகாராணியாரின் உள்ளாடைகளை அவர் திருடியவர் என்ற உண்மையை மறைத்து சிறையிலடைக்கப்பட்ட அவரை பின்னர், பணம் கடன் வாங்கி கொடுத்து மீட்டார் அந்த தையல்காரர்.

அத்துடன் இது முடியவில்லை, 14 மாதங்களுக்குப்பின் மீண்டும் அந்த நபரை ராணியின் உடை மாற்றும் அறையிலுள்ள சோபா ஒன்றின்கீழ் கண்டு பிடித்தனர்.

இப்படியே பல முறை சிக்கிய ஜோன்சை, பலமுறை பல நாடுகளுக்கு நாடு கடத்த, இறுதியாக 1893ஆம் ஆண்டு ஒரு மதுபான அடிமையாக தனது 70ஆவது வயதில் உயிரிழந்தார் ஜோன்ஸ்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...