முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் முன்வைத்த முக்கிய கோரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் எதிர்காலத்தில் தொழிலாளர் கட்சியின் ஆட்சி அமைந்தால் தமிழ் ஈழ மக்களுக்கு நீதி கிடைக்கவும், அவர்களது உரிமையை நிலைநாட்டவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பின் எம்.பி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசு தமது பொறுப்பில் இருந்து விட்டுவிலகிவிடக் கூடாது எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் இந்த வேளை மிகவும் துயரமானது என குறிப்பிட்ட கார்பின்,

தற்போதைய மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அட்டூழியங்களை இனங்காண வேண்டும் எனவும், இன அழிப்பு தொடர்பில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மட்டுமின்றி இலங்கையில் இனவாதம் ஒழிந்து அமைதி திரும்ப தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான ஒரு அரசியல் தீர்வும் ஒப்புதலும் முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் தமிழ் மக்களின் மீதான துன்புறுத்தல் ஆகியவை இலங்கையில் தொடர்கின்றன என கூறும் கார்பின்,

இலங்கையில் ஒரு பொதுவான தந்திரமாக சித்திரவதையை தொடர்ந்து பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் வர்த்தகம் மற்றும் ஆயுத விற்பனை தொடர்பில் இராஜதந்திர ரீதியான அழுத்தத்தை தொழிலாளர் கட்சியின் அரசாங்கம் அளிக்கும் எனவும் கார்பின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஈஸ்டர் நாள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு தொழிலாளர் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...