குத்தி கொலை செய்யப்பட்ட தந்தைக்காக மகள் எழுதிய உருக்கமான வரிகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் குத்தி கொலை செய்யப்பட்ட தன்னுடைய தந்தை வானில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியிருப்பதாக அவருடைய இளைய மகள் பலூனில் எழுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜான் லூயிஸ் (32) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மிடில்ஸ்பரோ பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜொனாதன் போர்டிட் என்கிற 29 வயது இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று வீட்டிற்கு வெளியில் அஞ்சலி செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பலூனில் சில உருக்கமான வரிகள் எழுதப்பட்டிருந்தன.

அவை ஜான் லூயிஸின் இளைய மக்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. அந்த பலூனில், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா. என் முழு இதயத்தோடும் நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் போய்விட்டீர்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

என் இதயத்தில் பாதி பரலோகத்திற்கு சென்றுவிட்டது. இப்படிக்கு உங்கள் இளவரசி என எழுதப்பட்டிருந்தது.

அஞ்சலியில் கலந்துகொண்ட சிலர் இதனை பார்த்து கண்ணீர் வடித்தபடியே சென்றுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...