என் தந்தையின் தலையில் என் கால் தடத்தை பார்க்கலாம்: பிரித்தானியாவின் இளம் கொலையாளியின் வாக்குமூலம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரு இளம்பெண் இரண்டு பேரை கொலை செய்ததோடு தனது நண்பர்களிடம், என் தந்தையின் தலையில் என் கால் தடத்தை பார்க்கலாம் என பெருமையடித்துக் கொண்ட சம்பவம் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

நாய் வைத்திருப்பது தொடர்பாக ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட சண்டைக்காக அந்த பெண்ணை இரண்டு நாட்கள் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறாள் பிரித்தானியாவைச் சேர்ந்த Lorraine Thorpe என்னும் 15 வயது இளம்பெண்.

அவளுக்கு ரோல் மாடலாக இருந்த Paul Clarke (41) என்னும் நபரும் கொலைக்கும் சித்திரவதைக்கும் உதவ இருவருமாக சேர்ந்து அந்த அராஜக செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Hunt (41) என்னும் அந்த பெண்ணை இருவரும் சேர்ந்து அடித்து உதைத்ததோடு, சீஸ் சீவும் சீவல் உதவியால் அவர் முகத்தை சீவி, அந்த காயத்தில் உப்பைத் தூவி கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள்.

கொலை செய்ததைக் குறித்து வெளியில் சொல்லிவிடுவார் என்று அஞ்சி தனது தந்தையாகிய Thorpe (43)ஐயும் அடித்துக் கொன்றிருக்கிறாள் Lorraine.

அவள் Thorpeஐ அடித்து தரையுடன் தரையாக மோதியதில் அவர் தலையில் ஏற்பட்ட அடையாளத்தைத்தான், என் தந்தையின் தலையில் என் கால் தடத்தை பார்க்கலாம் என்று கூறியிருக்கிறாள் Lorraine.

வீடியோவை காண

கொலை தொடர்பாக விசாரித்த பொலிசாருக்கு சிறிதும் Lorraine மீது சந்தேகம் ஏற்படவில்லை, காரணம் உயிரிழந்த இருவரின் உடலில் காணப்பட்ட காயங்களை பார்க்கும்போது, அவற்றை ஒரு 15 வயது இளம்பெண்ணால் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கமுடியாது என்று உறுதியாக நம்பினார்கள் அவர்கள்.பின்னர் உண்மை வெளிவந்த பிறகு Lorraineக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவளுக்கு உதவியாக இருந்த Clarkeக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்றாலும், சிறையில் அடைக்கப்பட்ட நான்கே ஆண்டுகளில் தனது அறையில் இறந்து கிடந்தான் அவன்.

இப்படி பதினைந்தே வயதாக இருக்கும்போது இரண்டு கொடூர கொலைகளை செய்த Lorraine பிரித்தானியாவின் இளம் கொலையாளியாக கருதப்படுகிறாள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers