பிரித்தானியாவில் இதே நிலை தொடர்ந்தால்... ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் புதிய வீடு கட்ட வேண்டும்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை இதே அளிவில் தொடர்ந்தால் அடுத்த 20 ஆண்டுகளில் 4 மில்லயன் புதிய வீடுகள் கட்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, பிரித்தானியாவில் 23.4 மில்லயன் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆண்டிற்கு 2,15,000 பேர் குடியேறி வருகின்றனர். இதே நிலையில் மக்கள தொகை அதிகரித்தால் 2041 ஆண்டு 27.6 மில்லியன் அதிகமான குடும்பங்களுக்கு வீடு தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டிற்கு 2,00,000 புதிய வீடுகள் கட்ட வேண்டும். வைட்ஹால் மதிப்பீட்டின் படி, கடந்த ஆண்டு சுமார் 1,65,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

அண்மைக்கால மதிப்பீடுகளின் படி தொடர் குடியேற்றத்தின் விளைவாக குறிப்பாக நாட்டின் தெற்குப் பகுதியில்போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் எரிசக்தி பொருட்கள் ஆகியவற்றில் புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், லண்டன் பள்ளிகளில் படிக்கும் 6 மாணவர்களில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என தெரியவந்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் 2019 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மக்கள் தொகை 60 மில்லியனை எட்டும் என மதிப்பீடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை இதே அளிவில் தொடர்ந்தால் இரவு,பகல் என ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் ஒரு புதிய வீடு கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என பிரித்தானியாவில் குடியேறுபவர்களை கண்காணிக்கும் அதிகாரியான லார்டு கிரீன் தெரிவித்துள்ளார்.

இதை சமாளிக்க குடியேற்ற வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றுவதை உறுதி செய்ய அரசாங்கம் உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers