Brexit : என்ன நடக்கிறது பிரித்தானிய அரசியலில்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட் தொடர்பான தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பிரித்தானிய பிரதமர் தெரசா மே மீண்டும் ஒரு நாளைக் குறித்திருப்பதோடு, ஒரு முடிவுக்கு வருவதற்கான அவசர தேவை ஏற்பட்டுள்ளதாக லேபர் கட்சியிடமும் தெரிவித்துள்ளார் அவர்.

தனது ஒப்பந்தத்தில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதோடு, கிட்டத்தட்ட அவரது நேரம் முடிந்துவிட்டது என்றும் கூறலாம்.

கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஐரோப்பிய தேர்தல்கள் ஒருபக்கம், பிரித்தானியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வருகை மறுபக்கம் என பிஸியான ஒரு சூழலில் அவர் பிரெக்சிட் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

நேரம் கடந்து போகிறது என அவர் ஜெரமி கார்பினுடன் கூறியுள்ளார் என்றாலும், அவருடனான பேச்சுவார்த்தைகளில் உருப்படியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, எடுக்கப்படும் என்று கருதுவதற்கான உருப்படியான காரணங்களும் இல்லை.

இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாதென, அவரது கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அவர் பதவி விலகுவது குறித்து அறிவிக்குமாறு அவரை வலியுறுத்த உள்ளனர்.

இதற்கிடையில் ஐரோப்பிய தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், அது கொடுக்கவிருக்கும் அதிர்ச்சி முடிவுகள், முக்கிய கட்சிகள் இரண்டையும் தனக்கு ஆதரவளிக்க வைக்கும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே தெரசா மேக்கு உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers