இலங்கை குண்டு வெடிப்பில் உடன் பிறந்தவர்களை பறிகொடுத்த சகோதரர்... அவருக்கு இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

இலங்கை குண்டு வெடிப்பில் உடன் பிறந்தவர்களை பறிகொடுத்த சகோதரர், குடும்பத்தினருக்காக நிதி திரட்டி வருவதாகவும், அதற்கு உதவும் படியும் கேட்டுள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இருக்கும் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினால் 253-பேர் பலியாகினர்.

இதில் 40-பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த Amelie(15) மற்றும் Daniel Linsey(19) ஆகியோர் பலியாகினர்.

இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் Amelie(15) மற்றும் Daniel Linsey(19)-ஐ பறிகொடுத்த அவர்களின் சகோதரர் குடும்பத்தினருக்காக நிதி திரட்டி வருகிறார். 500,000 டொலர்கள் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும், தற்போது வரை £78,000 டொலர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்