இலங்கைக்கு தேனிலவு வந்த போது உயிரிழந்த லண்டன் மனைவி... கணவர் தொடர்பாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in பிரித்தானியா

இலங்கைக்கு தேனிலவு வந்த இடத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல அவரின் கணவருக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனை சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33) இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் (31) என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 19-ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் இலங்கைக்கு தேனிலவு வந்தனர்.

இருவரும் கடந்த 23ஆம் திகதி இலங்கையில் உள்ள அமாரி கலே ஹொட்டலுக்கு வந்தனர்.

கடந்த 25-ஆம் திகதி உணவருந்திய தம்பதியினர் இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதில் உஷிலா படேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து உஷிலா மரணத்தில் அவர் கணவருக்கு தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் லண்டனுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கிளம் லண்டனுக்கு செல்ல தற்போது கலே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது, உஷிலா மரணத்தில் கிளமுக்கு தொடர்பிருக்காது என நீதிமன்றம் நினைப்பதால் அவர் லண்டனுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வியாழன் அன்று கிளம் லண்டனுக்கு கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான தடவியல் பரிசோதனை அறிக்கைகள் இன்று கிடைக்கவில்லை.

எனவே ஆகஸ்ட் 7 வரை விசாரணையின் நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்