பிரித்தானியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடம் பிடித்த சகோதரர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் இந்துஜா சகோதரர்கள் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.

சண்டே டைம்ஸ் பத்திரிகை பிரித்தானியாவின் பெரும்செல்வந்தர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

ஆண்டு வருமானம், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு, இதர நிறுவனங்களின் பங்கு பத்திரங்களின் கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்தானியாவில் உள்ள ஆயிரம் செல்வந்தர்களை இந்த பத்திரிகை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில், பிரித்தானியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை மேற்கொண்டுவரும் இந்தியர்களான ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தை மீண்டும் தக்கவைத்துள்ளனர்.

இவர்களின் மேலும் இரு சகோதரர்களான பிரகாஷ் இந்துஜா(72) மற்றும் அசோக் இந்துஜா(67) ஆகியோர் லண்டன் மற்றும் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக கம்பளம் மட்டும் உலோக விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டேவிட் ரெயூபென் - சைமன் ரெயூபென் சகோதரர்கள் சுமார் 18.664 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

2018 ஆம் ஆண்டுக்கான இதே பட்டியலில் 21.05 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்திருந்த பிரபல ரசயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் தற்போது மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார்.

பிரித்தானியாவின் பெரும்செல்வந்தர்கள்

  1. Sri and Gopi Hinduja (Industry and finance) | £22bn
  2. David and Simon Reuben (Property and internet) | £18.7bn
  3. Sir Jim Ratcliffe (Chemicals) | £18.2bn
  4. Sir Len Blavatnik (Investment, music and media) | £14.4bn
  5. Sir James Dyson and family (Household goods and technology) | £12.6bn
  6. Kirsten and Jorn Rausing (Inheritance and investment) | £12.3bn
  7. Charlene de Carvalho-Heineken (Inheritance, brewing and banking) | £12bn
  8. Alisher Usmanov (Mining and investment) | £11.3bn
  9. Roman Abramovich (Oil and industry) | £11.2bn
  10. Mikhail Fridman (Industry) | £10.9bn

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers