பிரித்தானியாவில் போலி பாஸ்போர்ட்டுடன் 12 ஆண்டுகள் வலம் வந்த நபர்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

சிறார் துஸ்பிரயோக வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஒருவர் 12 ஆண்டுகள் போலி பாஸ்போர்ட்டுடன் பிரித்தானியாவில் வலம் வந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் பயன்படுத்திய பாஸ்போர்ட்டில் அவரது புகைப்படமும், அவரது சகோதரரின் பெயரும் பயன்படுத்தியதால் அதிகாரிகளால் அவரை அடையாளம் காண முடியாமல் போனது என கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் கெண்ட் பகுதியில் குடியிருந்து வருபவர் 47 வயதான ஓனிமிசி செய்து.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மைட்ஸ்டோன் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆனால் குறித்த சரணடைய மறுத்ததுடன் 2007 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து 12 ஆண்டுகள் போலி பாஸ்போர்ட்டுடன் பிரித்தானியாவில் பயணம் மேற்கொண்டும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரில் இருந்து பிரித்தானியா திரும்பிய அவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரித்துள்ளனர்.

இதில் முரணாக பேசிய அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறாருடம் ஆபாச படங்கள் பார்த்ததாகவும், உணவு வாங்கித் தருவதாக கூறி துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்