குழந்தை பிறந்த விவகாரத்தில் விதியை மீறிய ஹரி - மேகன் தம்பதி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

குட்டி இளவரசர் பிறந்த விவகாரத்தில் ஹரி - மேகன் தம்பதியினர் விதியை மீறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனுக்கு கடந்த திங்கட்கிழமைன்று ஆண் குழந்தை பிறந்து. குட்டி இளவரசருக்கு 'ஆர்ச்சி ஹாரிசன்' என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் குழந்தை பிறப்பு சான்றிதழ் பற்றி உள்ளூர் பதிவாளரிடம் அரண்மனையில் இருந்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேகனுக்கு குழந்தை எந்த இடத்தில் பிறந்தது என்பது குறித்த தகவலை மருத்துவக்குழுவும் அளிக்க தவறியுள்ளனர்.

வில்லியம் - கேட் தம்பதியினர் தங்களுடைய 3 குழந்தைகளும் பிறந்த நேரத்தில் விரைவாக பிறப்பு சான்றிதழ் குறித்த தகவல்களை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்