குட்டி இளவரசரை சிம்பன்சியுடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய ஊடகவியலாளர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இளவரசி மேகனுக்கு பிறந்த குட்டி இளவரசரை, சிம்பன்சி குரங்குடன் ஒப்பிட்டு பேசிய ஊடகவியலாளரை பொலிஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசி மேகன் கடந்த திங்கட்கிழமையன்று, ஆர்ச்சர் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அன்றைய தினம் பிபிசி வானொலியில் பணிபுரிந்து வரும் டேனி பேக்கர் (61) என்பவர், சிம்பன்சி குரங்குடன் ஒரு தம்பதியினர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதை போன்ற புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த கடும் கோபமடைந்த பிரித்தானிய மக்கள் இணையதளத்தில் அவரை சரமாரியாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவர் அந்த பதிவை நீக்கினார்.

ஆனால் மேகன் மெர்க்கல் குழந்தை பெறப்போவதே தனக்கு தெரியாது என அந்த ஊடகவியலாளர் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் பொலிஸார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

மே மாதம் 8ம் திகதி பதிவிடப்பட்ட ட்விட்டர் புகைப்படம் குறித்து 9ம் திகதி வழக்கு பதியப்பட்டது. சிறப்பு அதிகாரிகளால் அவர் விசாரணை மேற்கொள்ளப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers