பிரித்தானியாவில் அமுலாகும் புதிய சட்டம்: மீறினால் 1000 பவுண்டுகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இந்த கோடை காலத்தில் தங்களது செல்ல பிராணிகளுடன் கடற்கரையில் நடைபயில செல்லும் பொதுமக்கள் கடுமையான அபராதம் செலுத்த நேரிடும் என பிரித்தானிய பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் மே 1 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை பெரும்பாலான கடற்கரைகளில் செல்லப் பிரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடைகளை மீறும் பொதுமக்களுக்கு உடனடி அபராதமாக 100 பவுண்டுகளும், இது நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தால் 1000 பவுண்டுகள் வரை அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகளானது ஒவ்வொரு கவுன்சிலுக்கும் வேறுபடுகின்றன.

பிரபலமான கடற்கரையில் ஒன்றான பிரைட்டனில் எந்த பகுதியில் செல்லப் பிராணிகளை கொண்டு செல்ல கூடாது என்பது தொடர்பில் அறிவுத்தல் பிறப்பித்துள்ளனர்.

டேவன் பகுதியை பொறுத்தமட்டில் Shoalstone Beach, Watcombe Beach உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகளை பொதுமக்கள் கொண்டு செல்லலாம்.

ஆனால் Broadsands Beach, Paignton Sands உள்ளிட்ட சில பகுதிகளில் செப்டம்பர் 30 வரை செல்லப் பிராணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், micro-chip பொருத்தப்படாத நாய்களின் உரிமையாளருக்கு 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers