ஆறு மாத கர்ப்பிணிக்கு கூரான பொருள் குத்துவது போன்று வயிற்றில் ஏற்பட்ட வலி: பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த சமயத்தில் அவர் வயிற்றில் புற்றுநோய் கட்டி வளர்ந்த நிலையில் பெண்ணிடம் அது குறித்து கூறாமலேயே அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ரச்சேல் அவேன் (34) என்ற பெண் தனது கணவர் ரோஸ் (35) உடன் வசித்து வந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்தது.

இந்நிலையில் ரச்சேல் மீண்டும் கர்ப்பமானார். அவர் ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் கூரான பொருள் குத்துவது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டதோடு பயங்கர வலியும் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு ரச்சேல் சென்ற நிலையில் அவருக்கு குடல்வால் அழற்சி பிரச்சனை இருப்பதாக நினைத்து மருத்துவர்கள் ரச்சேல் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது ரச்சேல் வயிற்றில் cancerpseudomyxoma peritoneii எனப்படும் மூன்று மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டும் வரும் வினோத புற்றுநோய் கட்டி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் இது குறித்து ரச்சேல் மற்றும் அவர் கணவர் ரோசிடம் மருத்துவர்கள் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் ஆப்ரேஷன் செய்து கட்டியை அகற்றியுள்ளனர்.

இதன் பின்னர் 41 வாரத்தில் அழகான பெண் குழந்தையை ரச்சேல் பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த நான்கு நாட்கள் கழித்தே ரச்சேல் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருந்த விடயத்தை மருத்துவர்கள் அவரிடம் கூறினார்கள்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரச்சேல் தன்னையும் தன் வயிற்றில் உள்ள குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி கூறினார்.

இந்த சம்பவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் அதை ரச்சேல் தற்போது வெளியிட்டுள்ளார்.

ரச்சேல் கூறுகையில், நான் ஆறு மாத கர்ப்பமாக இருந்த போது வயிற்றில் அதிக வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களிடம் சென்றேன்.

அவர்கள் எனக்கு புற்றுநோய் கட்டி இருப்பதை மறைத்து குடல் பிரச்சனைக்கு ஆப்ரேஷன் செய்வதாக சொன்னார்கள்.

நானும் என் கணவரும் மிகவும் பயந்துவிடுவோம் என்றே அவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

என்னையும் குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களை என்றும் நான் மறக்கமாட்டேன், தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளேன், இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers