நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்... கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட விமானத்தில், இளைஞர் ஒருவர் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று மான்செஸ்டரில் இருந்து கிரான் கேனரியா நோக்கி ரியான் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, அதில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரென தீயணைவிக்கும் கருவியை கொண்டு விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.

அவரை சமாதானப்படுத்த முயன்ற விமானப்பணிப்பெண்ணை தாக்க முயன்றதோடு, அங்கிருந்த பயணிகள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

45 நிமிடம் நீடித்த இந்த மிரட்டலால், அதிலிருந்த பயணிகள் அனைவரும் பெரும் பதற்றமடைந்துள்ளார்.

பின்னர் விமானம் தரையிறங்கியதும் அந்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.

விமானத்தில் இருந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகிய மூன்று பேருமே ஸ்பானிஸ் மொழி பேசுபவர்கள் என்பதால், அந்த இளைஞர் பேசியது அவர்களுக்கு புரியவில்லை என அங்கிருந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்