60 வருட தேடலுக்கு பின் பெற்ற தாயை முதன்முதலாக சந்தித்த மகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

வடஅயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே தாயை தேட ஆரம்பித்து, 60 வருடங்களுக்கு பின் கண்டுபிடித்துள்ளார்.

வடஅயர்லாந்தை சேர்ந்த எலைன் மேக்கென் (81) என்பவர் பிறந்த உடனே தாயிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, ஆதரவற்றோர் இல்லத்தில் விடப்பட்டுள்ளார்.

அங்கேயே தங்கி வளர்ந்த எலைன் மேக்கென், தன்னுடைய 19 வயதில் தாயை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். பல்வேறு முயற்சிகள் செய்து பார்த்த எலைன் மேக்கென், 60 வருடங்கள் கழித்து ஒருமுறை ரேடியோவில் தோன்றி தன்னை பற்றிய விவரங்களை கூறினார்.

அதன்மூலம் அவருடைய தாய் எலிசபெத் ஸ்காட்லாந்தில் இருப்பதை அறிந்துகொண்டார். இந்த மாதம் முதன்முறையாக தன்னுடைய தாயை சந்தித்த எலைன், அந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து பேசியுள்ளார்.

என்னுடைய அம்மா அவருடைய மகன்களுடன் வசித்து வருகிறார். அங்கு நான் சென்றதும் எனக்கு சிறப்பான ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மூன்று நாள் பயணமாக ஸ்காட்லாந்து சென்றிருந்தேன். என் அம்மாவுடன் நிறைய பேசி மகிழ்ந்தேன். நாளைய தினம் அவருடைய 104-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்