என் மனைவியை கொன்றுவிட்டேன்: ஒரு அதிர்ச்சி தொலைபேசி அழைப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அவசர உதவி கோரி தொலைபேசியில் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றிற்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய ஊழியர், ஒரு கணம் அதிர்ந்துபோனார்.

மறுமுனையில் பேசியவர், நான் என் மனைவியை கொன்று விட்டேன் என்று கூறியதைக் கேட்ட அந்த ஊழியருக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை.

பிறகு சமாளித்து, நீங்கள் உங்கள் மனைவியை கொன்று விட்டீர்களா என்று அவர் கேட்க, தொலைபேசியில் பேசியவர், ஆம் என்கிறார்.

ஆம்புலன்ஸ் நிறுவன ஊழியர், என்ன நடந்தது என்று கேட்க, அவளால் நடக்க முடியாது, படுக்கையில்தான் சிறுநீர் மலம் கழிப்பது எல்லாம், என்னால் சமாளிக்க முடியவில்லை, அவளை கொன்றுவிட்டேன் என்கிறார் அந்த நபர்.

அவருக்கு என்ன வயது என்று அந்த ஊழியர் கேட்க 86 என்கிறார் அந்த முதியவர். அடுத்து பேசும் அவர், தயவு செய்து வரும்போது சைரனை ஒலிக்க விடாமல் வாருங்கள், பக்கத்து வீட்டில் ஒரு குட்டிப் பெண்ணுக்கு பிறந்த நாள், அதை கெடுக்க வேண்டாம் என்கிறார்.

அந்த தொலைபேசியில் பேசியவர் Lawrence Franks (84) என்ற முதியவர்.

முதியோர் இல்லம் ஒன்றிற்கு தனது மனைவி கொண்டுபோகப்பட இருப்பதை அறிந்த Lawrence கருணை அடிப்படையில் அவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Lawrenceக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் அவரது தொலைபேசி அழைப்பை ஏற்ற ஆம்புலன்ஸ் ஊழியரான Frankஆல் அதற்கு பிறகு உடனடியாக தனது பணியை தொடர்ந்து செய்ய முடியவில்லை, Lawrenceஇன் அழைப்பால் அந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்